2013ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி அன்று பெங்களூர் மல்லீஸ்வரத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 11 காவல்துறையினர் உட்பட 16 பேர் காயமடைந்தனர். இக்குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் ஆலுமா திவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என்றும் இதற்கு தேவையான வெடிபொருட்களை கொடுத்தது திருநெல்வேலியைச்சேர்ந்த டேனியல் பிரகாஷ் என்பதும் தெரியவந்தது.
இ ந் நிலையில் வேறோரு வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட டேனியலை பெங்களூர் போலிஸார் விசாரணை நடத்தினர். ஆலுமா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய டேனியல் பிரகாஷ், கடந்த 2013ஆம் ஆண்டே வெடி பொருட்கள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தமிழகம் மற்றும் ஆந்திராவில் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலிஸாரிடம் இருந்து தப்பியோடிய டேனியல் பிரகாஷை கடந்த மாதம் அம்பாசமுத்திரத்தில் பெங்களூர் போலிஸார் சுற்றிவளைத்தனர். அப்போது போலிஸாரை தாக்கிவிட்டு தப்பியோடிய டேனியல் மூன்று மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Write comments