தனுசுக்கு இசையமைக்கிறார் கபாலி சந்தோஷ் நாராயணன்
‘இறைவி’ படத்தில் தயாரிப்பாளர்களைத் தவறாகச் சித்தரித்ததாகக் கூறி, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு ‘ரெட் சிக்னல்’ போட்டிருக்கிறது தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம். இதனால், ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் போகலாம் என்றிருந்த தனுஷ் – கார்த்திக் சுப்பராஜ் படக்குழு ட்ராப். இந்தப் படத்துக்குக் கொடுத்திருந்த தேதிகளை, ‘வடசென்னை’ படத்திற்கு மாற்றிக் கொடுத்துவிட்டார் தனுஷ். இதனால், ‘வடசென்னை’யின் வேலைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. வெற்றிமாறனின் எல்லாப் படங்களுக்கும் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைப்பாளர். ஆனால், அங்குதான் ஆச்சரிய ட்விஸ்ட் அரங்கேறியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு பிரபல பத்திரிகை ஒன்று சிறந்த நடிகருக்கான விருதை தனுஷுக்கு கொடுத்தது. ஆனால், ஜி.வி. பிரகாஷோ, ‘இந்த விருதை விஜய்க்கு கொடுத்திருக்கலாம்’ என கருத்து தெரிவித்திருந்தார். இதனால், அப்போதிருந்தே தனுஷுக்கும் ஜி.வி.க்கும் ஆகாது என கூறப்படுகிறது. இந்தநிலையில், தனக்கு ஜி.வி.யை இசையமைக்க அனுமதிப்பாரா தனுஷ்? அவருக்கு அனிருத் தானே வேண்டும் என குழம்பியது படக்குழு. ஆனால், அதற்கு வெற்றிமாறன் சம்மதிக்க வேண்டும் அல்லவா? ஏன் வம்பு, ரெண்டு பேருக்குமே வேண்டாம் என்று சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். மாமனுக்கு இசையமைத்தவர், மருமகனுக்கு இசையமைக்க மாட்டாரா என்ன?
வடசென்னை டா....!!!
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments