தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று 6வது முறையாக முதலமைச்சர் ஆன ஜெயலலிதா, ஆட்சிப்பொறுப்பேற்றதும் முதல்முறையாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். தனி விமானம் மூலம் டெல்லி சென்ற முதல்வருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. துணை சபாநாயகர் தம்பிதுரை முதல்வரை வரவேற்றார்.
விமான நிலையத்திலிருந்து தமிழ் நாடு இல்லத்திற்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலை 4:30 மணியளவில் டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு சென்று நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது 32 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். இந்த சந்திப்பின் போது தம்பிதுரை, ஷீலா பால கிருஷ்ணன், மற்றும் தலைமைச்செயலாளர் ராம மோகன் ராவ் உடனிருந்தனர்.
No comments:
Write comments