Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 9, 2016

வழக்கில் சட்ட உதவி கிடைக்காததால் : சென்னை ஐகோர்ட் வளாகத்தில் பெண் தற்கொலை மிரட்டல்


சென்னை ஐகோர்ட் நேற்று வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. இந்த நிலையில் ஐகோர்ட் வளாகத்தில் உள்ள 8 மாடி கொண்ட மாற்றுமுறை தீர்வு மையத்தின் மொட்டை மாடியில் ஏறிய பெண் ஒருவர், தற்கொலை மிரட்டல் விடுத்தார். மாடியில் ஏறி நின்ற அந்த பெண், தனக்கு யாரும் உதவவில்லை. எனவே, நான் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்யப் போகிறேன் என்று கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், அந்த பெண்ணிடம் சாதுர்யமாக பேசி அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர்.

விசாரணையில், அந்த பெண் கொடுங்கையூரை சேர்ந்த தனலட்சுமி (35) என்பது தெரியவந்தது. அவரது கணவர் ஜெயக்குமார். இருவருக்கும் திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், குடும்ப தகராறில் கணவர் கைவிட்டதாக கூறி குடும்பநல கோர்ட்டில் தனலட்சுமி வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடர்பாக இதுவரை 30க்கும் மேற்பட்ட வாய்தாக்களில் ஆஜரான தனலட்சுமி, இலவச சட்ட உதவி மையத்தில் உதவிகோரியுள்ளார். ஆனால் அவருக்கு யாரும் சரியாக உதவி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி நேற்று ஐகோர்ட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic