வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன் தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படாமலேயே தன்னை குற்றவாளியாக ஆக்கிவிட்டார்கள் என விஜய்மல்லையா தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கிகளிடமிருந்து சுமார் 9000 கோடிக்கு மேல் கடன் பெற்று விட்டு அதனை திருப்பிச்செலுத்தாமல் விஜய் மல்லையா கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பிச்சென்றார். அவர் அந்நாட்டுப் பாஸ்போர்ட்டை வைத்திருப்பதால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து மறுத்துவிட்டது. இதனை அடுத்து மல்லையாவை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
மல்லையாவை கைது செய்ய சர்வதே இன்டர்போலை நாடியுள்ள மத்திய அரசு அதற்கான ஆவணங்களை தயார் செய்து வருகிறது. இந்நிலையில் அவர் மீது ஏகப்பட்ட மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பிடிவாரண்டும் பிரப்பிக்கப்பட்டுள்ளது. விஜய் மல்லையாவின் 1400 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை சமீபத்தில் முடக்கியது. இது தொடர்பாக இங்கிலாந்தில் இருந்து செய்தி அனுப்பியுள்ள மல்லையா கூறும்போது "என் மீது எந்தவொரு விசாரணை நடத்தாமலேயே என்னை குற்றவாளி ஆக்கிவிட்டார்கள். நான் இங்கிலாந்து வரும் முன்பு எனக்கு எந்த ஒரு நோட்டீஸோ, கைது வாரண்டோ பிறப்பிக்கப்படவில்லை அப்படி இருக்க நான் தப்பி வந்துவிட்டதாக மீடியாக்கள் செய்தியை பரப்பியது. என்மீது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறையினர் நேர்மையாக விசாரிக்கவில்லை. கடன் பாக்கி தொடர்பாக வங்கிகள் ஒரு குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயாரக உள்ளேன். அமலாக்கத்துறை எடுத்து வரும் அடுத்தடுத்த நடவடிக்கையால் வங்கிகளுக்காக திருப்பி செலுத்த பணத்தை திரட்டுவதில் மேலும் சிக்கல்தான் ஏற்படும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விஜய் மல்லையாவின் இந்த பேட்டி தன்மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது என்பதற்காகவே இவ்வாறு தெரிவித்துள்ளார். பணத்தை திருப்பி தரவேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் விசாரணைக்கு ஒத்துழைத்து கூப்பிட்டவுடன் இந்தியாவிற்கு வந்திருப்பார் பிடிவாரண்ட் பிறப்பிக்கும் நிலையை ஏற்பட வைத்தது மல்லையாவின் செயல்பாடுகளால் தான் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

No comments:
Write comments