Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 13, 2016

ஆப்கானிஸ்தானில் இந்தியப்பெண் கடத்தப்பட்ட விவகாரம் - இதுவரை துப்புகிடைக்கவில்லை

 
ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட இந்தியப்பெண்ணை பத்திரிமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக வெளிவுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடத்தப்பட்ட ஜூடிட் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை

ஆப்கானிஸ்தான் காபூல் தைமானி பகுதியில் உள்ள ஒரு அறக்கட்டளையில் கொல்கத்தாவைச்சேர்ந்த ஜூடித் டிசவுஸா என்ற பெண் பணியாற்றி வந்தார். அவர் கடந்த வியாழக்கிழமை இரவு மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். ஜூடித்தை கடத்தியது தாலிபான் அமைப்பினரா? அல்லது வேறு எந்த அமைப்பைச்சேர்ந்தவர்களா? என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை. இக்கடத்தல் தொடர்பாக எந்த அமைப்பும் பொறுப்பேற்காததால் கடத்தல் தொடர்பாக இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

ஜூடித்தை பாதுகாப்பாக மீட்பதற்காக காபூலில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து இரவு பகலகாக அரசு பணியாற்றி வருகிறது என்றும், ஆப்கானிஸ்தான் அரசோடு தொடர்ந்து இணைப்பில் இருந்து அப்பெண்ணை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic