Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 7, 2016

குத்துச்சண்டை ஜாம்பவான் ஒரு மலையாளி... நம்புங்க மக்களே!

 
 
மரணமடைந்த பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி மலையாளி என கேரளாவின் அமைச்சர் ஜெயராமன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் ஜெயராமன், இவர் நேற்றைய தினம் டி.வி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது "பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி அமெரிக்காவில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியை நானும் கேள்விப்பட்டேன். அவர் கேரளாவிலிருந்து உருவான மிகச்சிறந்த விளையாட்டு வீரராக இருந்தார். ஏராளமான தங்க பதக்கங்களை பெற்று கேரளாவின் புகழை வானலாவிய உயரத்திற்கு கொண்டு சென்றார்" என்று கூறினார்.

இதனை சற்றும் எதிர்பார்திராத டி.வி தொகுப்பாளர் சிரித்தே விட்டார். நமக்கு என்ன வந்துவிட்டது? இதை ஒளிபரப்பினால் தம்முடைய சேனலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ஒளிபரப்பிவிட்டார். இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டுத்துறை தொடர்பாக அறவே தெரியாதவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பது வேடிக்கை என்று பலரும் விமர்சிக்கத் துவங்கிவிட்டனர். முகமது அலி யார் என்றே தெரியவில்லை என்றால் எதற்கு வாய் திறந்து இஷ்டத்திற்கு பேசனும் என்று கண்டனக்குரல்கள் அவரது ரசிகர்களிடமிருந்து வரத்துவங்கியது.  கேரள அரசு சொன்னதை அடுத்து அந்த டி.வி சேனல் அப்பேட்டியை மறு ஒளிபரப்பாமல் விட்டுவிட்டாலும், விடுவார்களா நமது நெட்டிசன்கள்?  எல்லா சமூக வலைத்தளங்களிலும் அப்பேட்டி வைரலாக பரவி வருகிறது.

வலைகுடா நாடுகளில் மலையாளிகளைப்பார்த்து உனக்கு ஏரோபிளேன் ஓட்டத்தெரியுமா என்று கேட்டால் கூட ஆம் தெரியும் என்றுதான் சொல்லுவான் என நையாண்டி செய்வார்கள். தற்போது இந்த அமைச்சர் பேசியதும் இதே போன்ற நையாண்டிக்கே வழிவகுத்திருக்கிறது. இருந்தாலும் மலையாளிகளின் இந்த குசும்பு கொஞ்ச ஓவர்தான்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic