Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 6, 2016

ஃபேஸ்புக் ஓனருக்கே ஆப்பு வைத்த ஹேக்கிங் திருடர்கள்


பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பயன்படுத்திய இன்னபிற சமூக வலைத்தளங்களின் கணக்குகளை தாங்கள் ஹேக் செய்துவிட்டதாக "அவர்மைன்" என்ற குழு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றவர்களைப்போல தானும் மற்ற சமூக வலைத்தளங்களில் தனது சொந்த கணக்கை வைத்திருந்தார். அவர் இன்ன பிற சமூக தளங்களில் ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து அக்கவுண்டுகளையும் தாங்கள் முடக்கிவிட்டதாக "அவர்மைன்" என்ற குழு தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. தற்போது அவர்களுடைய டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது. எனினும் மார்கின் பிற சமுக தளங்களின் கணக்குகள் எவ்வாறு திருடப்பட்டது என்ற முழு விபரம் இதுவரை தெரியவில்லை. லிங்க்ட் இன் சமூக தளத்தின் லட்சக்கணக்கான அக்கவுண்ட்களின் விபரங்கள் சமீபத்தில் திருடப்பட்டது. இதன் மூலம் மார்கின் தகவல்களும் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


சில நாட்களுக்கு முன் பிரபல லிங்க்ட் இன் தளத்தின் செய்திகளும், அதில் கணக்கு வைத்திருப்போரின் பாஸ்வேர்டுகளும் திருடப்பட்டது. இதனால் அந்த நிறுவனமும் தனது தளம் பயன்பாட்டாளர்களின் கணக்குகளை மறு ஆய்வு செய்து வருகிறது. அவ்வாறு திருடப்பட்ட கணக்குகளி பேஸ்புக் நிறுவனர் மார்கின் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டும் இருந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர். "அவர்மைன்" குழு மார்கின் "இன்ஸ்டாகிராம்" தளத்தின் அக்கவுண்டுகளையும் நாங்கள் திருடிவிட்டோம் என்று தெரிவித்தனர். ஆனால் இதனை முற்றிலுமாக பேஸ்புக் நிறுனம் மறுத்துள்ளது. மார்கின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. 


நவீன யுகத்தின் திருட்டுக்களும் நவீனமாகிப்போயுள்ளது. சாதாரணமாக பொழுதுபோக்கிற்காக மட்டும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோருக்கு இதில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றாலும், அலுவலகம் தொடர்பாகவும், தங்களது வியாபாரம் தொடர்பாகவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் சற்று உஷாராகவே இருக்க வேண்டும் என்பதற்கு இந்த செய்தியே சான்று.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic