Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jun 11, 2016

தபோல்கர் கொலை வழக்கில் ஹிந்து அமைப்பைச்சேர்ந்தவர் கைது


மஹாராஷிராவைச்சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் முதல் முறையாக ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திய தபோல்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு புனேவில் மேம்பாலம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த தபோல்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வழக்கை விசாரித்த காவல்துறையினருக்கு 2014 ஆண்டு வரை ஒது துப்பும் கிடைக்காததால் குற்றவாளிகளை கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது. இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததை அடுத்து 2014 ஆம் ஆண்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. தபோல்கர் கொலை செய்யப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் இதுவரை ஒருவர் கூட கைதுசெய்யப்படாமல் இருந்தது. தற்போது சிபிஐ விசாரணையில் இவ்வழக்கு தொடர்பாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. இக்கொலை வழக்கில் தொடர்புடைய வீரேந்திர தாவ்டே என்னும் நபரை சிபிஐ கைது செய்து சிறப்பு காவலில் வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விசாரணையின் போது கைது செய்யப்பட்ட வீரேந்திர சிங்  ஹிந்து ஜனஜக்ருதி அமைப்பைச்சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic