இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள இலங்கை இராணுவம்ப்படையினரைத் திரும்பபெற முடியாது என்ன இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இலங்கையி உள் நாட்டுபோர் நடந்து முடிந்து 5 வருடங்களுக்கு மேல் ஆகியும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வடக்கு மாகாணங்களில் இலங்கை இராணுவத்தினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் அங்கு வாழும் தமிழர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலேயே காலத்தை கழித்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே வந்து பக்கத்து வீட்டுக்குச்செல்வதென்றாலும், வீட்டு விசேஷ நிகழ்சிகளுக்கு ஒன்று கூடுவதாக இருந்தாலும் இராணுவத்தினரிடம் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்கிற ரீதியில் இலங்கை இராணுவத்தினர் அம்மக்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இது சுதந்திரமாக வாழும் மக்களின் வாழ்வு நிலை என்று ஒருவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. திறந்த வெளி இராணுவ சிறைச்சாலையிலேயே தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத்தான் இது உணர்த்துகிறது. இந்த நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக இந்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதே உலகத்தமிழர்களின் கேள்வியாக இருக்கிறது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினரை திரும்பப்பெறமுடியாது என இலங்கை அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஈழத் தமிழர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தப்படும் நோக்கம் கொண்ட அரசாகவே இலங்கை அரசை பார்க்க முடியும். 6 தமிழர்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற ரீதியில் 24 மணி நேரமும் தமிழர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இப்படி இருக்க அம்மக்களால எப்படி நிம்மதியாக வாழ முடியும் என்பது தெரியவில்லை.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையில் ஒன்றாக கருதப்படும் தமிழர்கள் படுகொலையின் விசாரணையில் ஐ. நா மன்றம் தலையிட்டும் இன்று வரை விடிவு பெறாத நிலையிலேயே இருக்கிறது. அங்கு வாழும் அம்மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வடக்கு மாகாணத்தின் முதலைமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கை அரசு இங்கே நிறுத்திவைத்திருக்கும் இராணுவ வீரர்களை திரும்பப்பெற வேண்டும் என்று எவ்வளவோ கோரிக்கை வைத்தும் இலங்கை அரசு அதனை மறுத்துவிட்டது.
வட பிராந்தியத்தில் இராணுவத்தினரை திரும்ப அழைக்கும் பேச்சுக்கே இடமில்லை. வடக்கு மாகாணத்தில் தனி நாடு கோரிக்கை எழாமல் இருக்கவே இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை திரும்பப்பெற்றுவிட்டால் தனி ஈழ கோரிக்கையை தமிழர்கள் கையில் எடுத்துவிடுவார்கள் எனவே இராணுவத்தினரை திரும்பப்பெரும் பேச்சுக்கே இடமில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர்களை தொடர்ந்து இரண்டாந்திர குடிமக்களாகவே நடத்தப்படவேண்டும் என்கிற ரீதியில் இலங்கை அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. தமிழர்களுக்கு எந்தவித உரிமையும் வழங்கப்படாது என்பதே தெரிகிறது.
இலங்கையில் தமிழர்களை நிம்மதியாக வாழவிடமாட்டார்கள் என்பது அனைவருக்கும் அறிந்த ஒன்றே. ஆனால் இவ்விவகாரத்தில் ஐ. நா தலையிட்டு பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பதையே தமிழகத்தில் பல கட்சிகள் கோரிக்கை வைக்கின்றன. தமிழர்களை புறக்கணித்துவிட்டு இலங்கை அரசுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைக்கின்றனர்.
No comments:
Write comments