தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக டெல்லி செல்லவிருக்கிறார். இந்த பயணத்தால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தற்போது தமிழகத்தில் அதிக கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருபவர்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதலிடத்தில் இருக்கிறார். தொடர்ந்து அரசியல் விமர்சனம் செய்து வரும் அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் பிதமரை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தை விமர்சித்த அவர் கூறும்போது "ஜெயலலிதாவின் டெல்லி பயணம் தமிழ்நாட்டிற்கோ, தமிழ் மக்களுக்கோ எந்த பயனும் அளிக்கப்போவதில்லை. பிரதமரை சந்திக்கப்போகும் அவர் தனது சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாகவும், 570 கோடி கண்டைனர் லாரிகள் பறிமுதல் தொடர்பாகவும் மட்டுமே பேசுவார்" என்று தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Write comments