இன்றைய தேசத்தைப் பார்க்கும் முன், உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். இந்த வெளிநாட்டு பயணத் தகவல்கள் உங்களை குறைந்த செலவில் பயணப்படச் செய்வதற்கே. மேலும், ஊர் சுற்றும் குருவிக்கு இன்றே கடைசி போஸ்டர் ஒட்டப்படுகிறது. நாம் கடைசியாக பார்க்க இருக்கும் தேசம், மியான்மர்.
உங்கள் மனதைத் திருடும் இடங்கள்: வளர்ந்து வரும் சுற்றுலா தளங்களில், தனி இடம் வகிக்கும் தேசம் மியான்மர். இந்த தேசம், வணிக ரீதியின் உச்சம் தொடும் முன் ஒருமுறையாவது சுற்றிப் பார்த்துவிடுங்கள். எங்கு நோக்கினும் இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் அழகிய கோயில்களின் வசீகரம் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும். இந்த தேசத்தினைச் சுற்றிப் பார்க்க உங்களுக்கு ஆறு நாட்கள் தேவைப்படும்.
கவனம் ஈர்க்கும் நடவடிக்கைகள்: வான் நோக்கிய பலூன் பயணங்கள், திருவிழாக்கள், சாலை உணவக பயணங்கள், கோயில் சுற்றுலாக்கள், தண்ட்வீ கடற்கரைப் பயணம், மீன் பிடித்தல், பூங்கா பயணங்கள், புத்த மடாலயங்களை சுற்றிப் பார்த்தல் மற்றும் படகு சவாரி.
நமது செலவு மற்றும் பயணம்: பெங்களூருவில் இருந்து புறப்படும் மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் புக்கிங் செய்தால் ரூபாய் 30,000 வசூலிக்கப்படுகிறது.
தங்குமிடம்: மியான்மரில் உள்ள ஹ்னின் சி பட்ஜெட் இன் மற்றும் தி வில்லோ இன் ஹோட்டல்களில் ஆறு நாட்கள் தங்குவதற்கு ரூபாய் 6,000 மட்டுமே.
மீண்டும் பறக்கலாம்

No comments:
Write comments