பஞ்சாபில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து அகாலி தாள் கட்சி ஆட்சி செய்து வருகிறது. பஞ்சாபில் போதை பொருட்களின் பயன்பாடு அதிக அளவில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் பங்கெடுத்த ராகுல் காந்தி பேசும்போது "பஞ்சாபில் போதை பொருட்களின் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. போதை பழக்கத்திற்கு அடிமையாகி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆளும் அகாலி தாள் அரசு இதனை கண்டு கொள்ளவில்லை, காரணம் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களிடமிருந்து அவர்களுக்கு பெரும் பணம் கிடைக்கிறது.
பஞ்சாபின் இந்த நிலையை விளக்கும் வகையில் வெளிவந்திருக்கும் "உட்தா பஞ்சாப்" திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளனர். எங்கே மாநிலத்தின் உண்மை நிலை வெளிவந்துவிடுமோ என்று அஞ்சியே இந்த தடையை கொண்டு வந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை போதை இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் போதை வியாபாரத்தை முற்றிலுமாக தடை செய்து, இது நாள் அவரை அதன் மூலம் பணம் சம்பாதித்தவர்களிடமிருந்து பணத்தை அபகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படும். பஞ்சாப் மக்களுக்கு முன் இது மிகப்பெரிய எதிரியாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்த போதை என்னும் எதிரியை வீழ்த்துவோம் என்று ராகுல் காந்தி கூறினார்.
No comments:
Write comments