காரைக்குடியில் நடைபெற்ற தேமுதிக பிரமுகரின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் பேசும்போது "சினிமாவில் ஒரு ஹீரோ முதலில் வில்லனிடத்தில் அடி வாங்கிக்கொண்டே இருப்பார், பின்னர் எழுந்து வில்லனை வீழ்த்துவார் அது போலவே நமது கேப்டனும் மீண்டும் எழுந்து வருவார்" என்று பேசினார்.
தேமுதிகவை பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெறவில்லை, சோர்வடைந்துவிட்டனர் என்று சிலர் கூறுகின்றனர். அப்படி கிடையாது. விஜயகாந்த் எப்பொழுதும் எதிர் நீச்சம் போட்டுத்தான் வாழ்க்கையை சந்தித்துள்ளார். மனது வருதப்படவோம், தொய்வடையவோ ஏதும் இல்லை. நாம் பல மடங்கு தைரியத்தோடு எதிர் நீச்சம் போட வேண்டும். இந்த தேர்தலில் கேப்டன் எடுத்த முடிவு தமிழக மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுதான். விரைவில் மக்கள் நம் பக்கம் திரும்புவார்கள். முள் பாதை மலர் பாதை என இருபாதைகள் கேப்டன் முன்பு இருந்தது, ஆனால் கேப்டன் முள்பாதையையே தேர்ந்தெடுத்தார். கடவுள் நல்லவர்களுக்கு சோதனை கொடுப்பார் ஆனால் கைவிடமாட்டார், ஆனால் கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார், கைவிட்டுவிடுவார். நம்மை பொறுத்தவரை எடுத்த பயணத்தில் உறுதியாக இருப்போம் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் கலந்து கொண்டார். ஆனால் வழக்கம்போலவே என்ன பேசுகிறார் என்பது பத்திரிகையாளர்களுக்கு புரியவே இல்லை.
தேர்தலில் தோல்வியடைந்ததற்கான முழுக்காரணம் மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்ததே என தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தல் தோல்வியால் சோர்ந்து போயுள்ள தேமுதிகவினை உற்சாகப்படுத்தி கட்சிப்பணிகளை வீரியமாக எடுத்துச்செல்ல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே கட்சியின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும். தேமுதிகவிலிருந்து பிரிந்து போன சிந்திரகுமார் தனிக்கட்சி துவங்கி தற்போது தேமுதிகவின் பல மாவட்ட செயலாளர்களை தன் கட்சிக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிகவிற்கு முன்னால் சவால்கள் குவிந்து இருக்கும் இந்த நேரத்தில் சினிமா வசனங்களை பேசி மக்களை முட்டாளாக்காமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

No comments:
Write comments