உ.பியில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜ.க மதவாத அரசியலை கையில் எடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அலஹாபாத்தில் பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று துவங்கி இன்று மாலை வரை நடைபெற்று வருகிறது. செயற்குழு துவங்குவதற்கு முன்னதாக கட்சியின் செயல்வீரர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க தலைவர் அமித்ஷா கூறும்போது "உ.பியில் சமாஜ்வாதி ஆட்சியில் இந்துக்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இந்த ஆட்சியில் சட்ட ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்துவிட்டதாகவும், இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் இந்துக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும், பாதுகாப்பிற்காக அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்வதாகவும்" அவர் தெரிவித்தார்.
கைரானா என்ற பகுதியிலிருந்து 350ற்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் இடம்பெயர்ந்து சென்றுவிட்டதாக கூறிய அமித்ஷாவின் கூற்றில் உண்மை இருப்பதாக பா.ஜ.க மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா செய்தியாளர்களிடத்தில் தெரிவித்துள்ளார். உ.பியில் இந்துக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். மாநில அரசு மக்களை காக்க தவறிவிட்டது என்று மேலும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இக்கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி பொதுத்தேர்தலில் நாம் பெற்ற வெற்றியை தக்கவைக்கும் வகையில் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பா.ஜ.க வழக்கம் போல் மதவாத அரசியலை கையில் எடுத்துள்ளது. உத்தரபிரதேசத்தில் அவர்கள் கூறுவது போல இந்துக்களுக்கு அப்படி எந்த பிரச்சனையும் இல்லை, ஓரிரு இடங்களில் தனிப்பட்ட முறையில் நடந்த பிரச்சனைகளுக்கு மதச்சாயம் பூசி மாநிலம் முழுவதும் இந்துக்களுக்கு எதிராக செயல்பாடுகள் நடந்து வருவதுபோல சித்தரிக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வளர்ச்சி என்பதை முன்னிருத்தி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். தற்போது ஆட்சி அமைத்து 2 வருடங்கள் ஆகியும் எந்த ஒரு வளர்ச்சியையும் காட்டிறாத பா.ஜ.க அரசு இம்முறை அதையே பயன்படுத்த முடியாது என்று தெரிந்தவுடன் மதவாத அரசியலை கையில் எடுத்திருகிறார்கள் என சமாஜ்வாதி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
அடுத்த ஆண்டு உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், குஜராத், இமாச்சல பிரதேஅம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
No comments:
Write comments