கட்சியின் உள்விவகாரங்களின் பிரேமலதா இனி தலையிடாமல் இருந்தால் தான் கட்சி உருப்படும் என தேமுதிக நிர்வாகிகள் விஜயகாந்திடம் தெரிவித்ததால் அதிர்ச்சியில் உள்ளார் அவர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக தான் போட்டியிட்ட 104 தொகுதிகளிலும் தோல்வியடைந்ததோடு மட்டுமல்லாமல் கட்சியின் தலைவர் விஜய்காந்தே உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். இந்த தோல்வியால் கட்சியினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
2006 தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துபோட்டியிட்டு 1 தொகுதிகளை வென்றது. 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளை கைப்பற்றியது. இம்முறை அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்ததோடு மட்டுமல்லாமல் 5% மேலான தனது வாக்கு வங்கியை அக்கட்சி இழந்தது. தோல்வி குறித்து மாவட்ட நிர்வாகிகளிடத்தில் கருத்து கேட்கும்போது மக்கள் நலக்கூட்டணியோடு சேர்ந்ததால்தான் தோற்றோம் எனவும், கட்சியின் அனைத்து தொண்டர்களும் திமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்பினார்கள் என தெரிவித்தனர்.
வடமாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கு வெகுவாக பாதித்துள்ளதாகவும், இனி வரும் காலங்களில் கட்சியின் உள்விவகாரங்களில் பிரேமலதா தலையிடாமல் இருந்தால் மட்டுமே கட்சி உருப்படும் என்று தடாலடியாக விஜய்காந்திடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ந்துபோயுள்ள் விஜயகாந்த் செய்வதறியாது விழித்துக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே மக்கள் நலக்கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறுவது 90% உறுதியாகிவிட்டது. மக்கள் நலக்கூட்டணி சார்பாக நடைபெறவிருக்கும் இப்தார் விருந்து நிகழ்ச்சியின் அழைப்பிதழில் விஜயகாந்த் பெயர் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
தேமுதிகவின் எதிர்காலம் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உரிய நடவடிக்கைகளில் இறங்கினால் மட்டுமே கட்சியையும் தொண்டர்களையும் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

No comments:
Write comments