ஐதரபாத்தில் 2015ஆம் ஆண்டு திரைப்படங்களுக்கான ஃபிலி ஃபேர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தென்இந்திய நடிகர் நடிகைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 2015ஆம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை மற்று நானும் ரவுடிதான் ஆகிய திரைப்படங்கள் ஃபிலிம் ஃபேர் விருதுகள் பட்டியலில் இடம்பெற்றது. இதில் சிறந்த தமிழ் பட விருதினை காக்கா முட்டை திரைப்படம் தட்டிச்சென்றது.
அதற்கான விருதினை பெற்றுக்கொண்ட தனுஷ் மேடையில் கூறும்போது "காக்கா முட்டை திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை சர்வதேச அளவுக்கு இருந்ததால் அவருக்கு இன்னும் அதிகமான பாராட்டுக்கள் கிடைத்திருக்க வேண்டும்" என்று கூறினார். அவ்விழாவில் சிறந்த நடிகைக்கான விருது நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த நயன்தாராவுக்கு கிடைத்தது. விருதினை பெற்றுக்கொண்ட அவர் கூறும்போது " நானும் ரவுடிதான் படத்தில் எனது நடிப்பு தனுஷிற்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இனி வரும் காலங்களில் எனது திறமைகளை வெளிப்படுத்தி அவரை கவர முயற்சிப்பேன். இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு என்னுடைய நன்றியினை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார். மேடையில் இவ்வாறு வெளிப்படையாக நயன்தாரா பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த படப்பிடிப்பின் போது தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. படப்பிடிப்பு முடியும் தருவாயில் விக்னேஷ் சிவனுக்கும் தனுஷிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
No comments:
Write comments