மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் ஏக்நாத் கட்சே நிழல் உலக தாதா தாவுத் இபுராகிமுடன் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலை அவர் பதவி விலகினார். இதனை அடுத்து அவர் மீது தேச துரோக வழக்கு பதிவுசெய்ய வேண்டுமென ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநில அமைச்சர் ஏக்நாத் கட்சே மீது சமீபகாலமாக தொடர்ந்து பல புகார்கள் வந்து கொண்டே இருந்தது. புனேயில் மராட்டிய தொழில் வளர்ச்சி கழக்கத்தின் மனைகளை கட்சே பறித்துக்கொண்டதாக ஏற்கனவே அவர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் மும்பை தாக்குதலுக்கு முக்கியா காரணமாக இருந்த பயங்கரவாதி தாவுத் இபுராகிமுடன் தொலைபேசியில் தொடர்பு வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து உடனே அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பல கட்சிகளும் நெருக்கடி கொடுத்தன.
இப்பிரச்சனை தொடர்பாக மராட்டிய காவல்துறையினர் கூறும்போது இப்பிரச்சனை தொடர்பாக பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், விரைவில் இது முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். மஹாராஷ்டிரா முதலைமைச்சர் பட்னாவிசும் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித்ஷாவை சந்தித்டு கட்சே தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து கட்சே தன்னுடைய பதவியை ராஜினாம செய்வதாக கூறி முதலமைச்சரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கும் பட்சத்தில் கட்சே மீது தேச துரோக வழக்கை பதிவு செய்ய வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார். வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய், போன்றவற்றிற்கெல்லாம் தேச துரோக வழக்கை பதிவு செய்யச்சொல்லும் பா.ஜ.கவினர் தற்போது தனது கட்சியை சார்ந்தவரே பயங்கரவாதியுடன் தொடர்பு வைத்திருந்தற்கு ஏன் தேசவிரோத வழக்குகளில் பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் குஜராத் அரசு ஹர்திக் படேலுக்கு எதிரான தேசதுரோக வழக்கை திரும்பப்பெறவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பா.ஜ.க பலமான கட்சியாக திகழ்ந்து வரும் குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Write comments