துபாய் விமான நிலைய பகுதியில் ஆளில்லா சிறிய ரக விமானம் (Drone) ஒன்று பறந்ததால் விமான நிலையம் சுமார் ஒரு மணிநேரம் மூடப்பட்டது. எப்பொழுதும் ஓய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கும் துபாய் சர்வதசே விமான நிலைய வான்வெளியில் சனிக்கிழமை ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்று வட்டமடித்துக் கொண்டிருந்தது. இதானால் விமான நிலையம் 69 நிமிடங்கள் மூடப்பட்டது.
பின்னர் மதியம் 12. 45 மணிக்கு விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆளில்லா சிறிய ரக விமானங்களால் துபாயில் விமான சேவை பாதிக்கப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பொழுதுபோக்கிற்காக ஆளில்லா சிறிய ரக விமானங்களை துபாயின் சில பகுதிகளில் பறக்க விட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மேலும் ஆளில்லா சிறிய ரக விமானம் வைத்திருப்பவர்கள் அதை அமீரக சிவில் விமான போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments