'துருக்கி நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டு சிக்கிய போது, அதிகாரிகள் எங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை' என, சென்னை திரும்பிய மாணவர்கள் மிகுந்த வருத்தம் தெரிவித்தனர்.
துருக்கியில் நடைபெறும், பள்ளிகள் அளவிலான சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, தமிழகத்தைச் சேர்ந்த, 11 மாணவ, மாணவியர் உட்பட, இந்தியாவைச் சேர்ந்த, 148 பேர் சென்றனர். அங்கு ஏற்பட்ட ராணுவ புரட்சியால், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், அங்கு புரட்சி முறியடிக்கப்பட்டு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர், விமானம் மூலம், நேற்று காலை டில்லி வந்தனர். தமிழக மாணவர்கள் அங்கிருந்து விமானம் மூலம், மாலை சென்னை திரும்பினர்.
விமான நிலையத்தில், மாணவர்கள் அளித்த பேட்டி:
துருக்கியில், அதிகாரிகளிடம் கெஞ்சிய போது, அவர்கள் யாரும் எங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இந்திய விளையாட்டு துறை, எங்களுக்கு சீருடை வழங்க மறுத்த காரணத்தால் தான், எங்களால் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. இந்திய உணவுகள் வழங்கப்படாமல், அந்நாட்டு உணவுகளே வழங்கப்பட்டன.
இது போன்ற குறைபாடுகள், வருங்காலத்தில் ஏற்படாத வண்ணம், விளையாட்டு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments