Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jul 1, 2016

உங்க பகுதியை தூய்மையாக வெச்சிருக்கீங்களா...? அப்போ நீங்க கபாலி படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்கலாம்...!!!



கலைப் புலி எஸ். தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில்  உருவாகியுள்ள "கபாலி" படத்தின் பாண்டிச்சேரி விநியோக உரிமையை லெஜண்ட்ஸ் மீடியா நிறுவனம் வாங்கியுள்ளது.

லெஜண்ட்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.பி. செல்வகுமார், பாண்டிச்சேரி கவர்னர், மற்றும் முதல்வரை நேரில் சந்தித்தனர். அவர்களிடம், "தமிழ்ப்  படங்களின் திருட்டு வி.சி.டி.யை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார்". திருட்டு வி.சி.டி.யை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகியோர் அவர்களிடம் கூறியுள்ளனர். 

கூடவே தங்களது பகுதியை தூய்மையாக வைத்திருப் போருக்கு கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கட்  வழங்கவும் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினியை பாண்டிச்சேரியின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்க வேண்டும் என்று கிரண்பேடி தனது ட்விட்டர்  பக்கத்தில் கருத்துப் பதிவிட்டு அழைப்பு விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic