Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jul 1, 2016

நோ ஹெல்மெட்...? சாரி... நோ பெட்ரோல்...!!!


கேரளாவில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் 'ஹெல்மெட்' அணியவில்லை என்றால், இனி பெட்ரோல் வழங்கப்படமாட்டது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள போக்குவரத்து துறை அமைச்சர் சசிந்திரன், திருவனந்த புரத்தில் போக்குவரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துவோர் பெட்ரோல் பங்க்குகளுக்கு 'ஹெல்மெட்டு'டன் சென்றால் மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதனை முதல்கட்டமாக திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு நகரங்களில் வரும் ஆகஸ்ட் முதல் தேதி முதல் நடைமுறைபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கைக்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோரிடம் வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில், அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை விளக்கி பெட்ரோல் பங்குகளில் போர்டுகள் வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த முறை பின்பற்றினால், பல உயிர்கள் காக்கப்படும். செய்யுமா தமிழக அரசு...?

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic