Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Jul 21, 2016

சுற்றுச்சூழல் ஆர்வலர் பியுஷ் மனுஷ் கைது எதிரொலி - கனிமொழி எம்.பி. கண்டனம்


பாராளுமன்ற மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவர் கனிமொழி எம்.பி. தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் போராளியும், காலநிலை மாற்ற ஆர்வலருமான பியுஷ் மனுஷ் சில நாட்களுக்கு முன் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு ரெயில்வே மேம்பாலம் கட்டுவதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மனுஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் குடிமக்கள் பேரவை என்ற அமைப்பின் தலைமையேற்று செயல்படும் மனுஷ் சேலம் மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளைக் காப்பாற்றுவதற்காக போராடி வருபவர். இவரது கைது பலத்த கண்டத்துக்குரியது.

விமர்சனங்கள்தான் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அடிப்படையானவை. ஆனால் இந்த அரசு விமர்சகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களை நசுக்குவதிலேயே குறியாக இருக்கிறது. அரசின் அத்துமீறல்களுக்குக் கட்டுப்படாதவர்களை காவல்துறை போன்ற அரசு அமைப்புகள் சித்ரவதை செய்வது தொடர்ந்து வருகிறது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic