1980-ல் நடைபெற்ற மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த முகமது சாஹித் (56) டெல்லியில் இன்று காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திய விளையாட்டு வீரர்கள் பலரும் முகமது சாஹித்தின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
ஈரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பால் சில காலமாக அவதிப்பட்டுவந்தார் சாஹித். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மத்திய அரசு சமீபத்தில் ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தது.
சாஹித்தின் மறைவு குறித்து பிரதமர் மோடி தன்னுடைய இரங்கல் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சாஹித்தைக் காப்பாற்ற மிகவும் முயற்சி செய்தோம். ஆனால் எங்கள் உதவியோ, வேண்டுதல்களோ அவரைக் காப்பாற்ற போதுமானதாக இல்லை. அவருடைய மறைவுக்கு இரங்கல்களைத் தெரிவித்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
செய்தி :: சாஹிப்...


No comments:
Write comments