Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 11, 2016

சிகிச்சைக்காக லஞ்சம் கொடுக்காததால் 10 மாத குழந்தை உயிரிழப்பு


உத்திரபிரதேசத்தில் 10 மாத குழந்தைக்கு சிகிச்சை செய்ய லஞ்சம் கேட்டு கொடுக்காததால் அக்குழந்தை உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச தலை நகர் லக்னோவிலிருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் உள்ள பாக்ராஜ் என்னும் ஊரில் சுமிதா என்கிற அந்த பெண் தனது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றிருக்கிறார். அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை ஊழியர்கள் ஒவ்வொருவரும் லஞ்சம் கேட்டுள்ளனர். இறுதியாக அக்குழந்தை ஊசி போட வேண்டும் என்ற நிலை வந்த போது ஊசி போடும் நபரும் லஞ்சம் கேட்டு கொடுக்காததால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குழந்தை இறந்து போனத அறிந்த அந்த பெண் அக்குழந்தையை தனது மடியில் வைத்து கதறிய காட்சி அங்குள்ளவர்களுக்கும் கண்ணீரை வரவழைத்தது. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது. அதே சமயம் யாரேனும் லஞ்சம் வாங்கினார்களா என்பதை விசாரித்து வருகிறது.

சுமிதா தனது கணவர் சிவாவுடன்  தன் குழந்தை கிருஷ்ணாவிற்கு கடும் காயச்சல் காரணமாக இம்மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். குழந்தையை முதலில் பரிசோதித்த மருத்துவர் உடனே குழந்தையை அட்மிட் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அங்கே பணி செய்து கொண்டிருந்த செவிலியர் குழந்தையை அட்மிட் செய்வதற்கான ஆவணங்களை தயார்படுத்த லஞ்சம் கேட்டிருக்கிறார். பின்னர் குழந்தை அனுமதிக்கப்பட்டிருக்கு வார்டை சுத்தம் செய்வதற்கு அங்குள்ள தொழிலாளி அடுத்ததாக லஞ்சம் கேட்டிருக்கிறார். பின்னர் குழந்தைக்கு ஊசி போட வேண்டும் என்றும், அப்படி ஊசி போட்டால்தான் காய்ச்சல் குறையும். அப்படி போடவேண்டுமானால் இவ்வளவு ரூபாய் தர வேண்டும் என கேட்டிருக்கிறார். 

சிறிதி அவகாசம் தாருங்கள், பணத்தை கொடுத்துவிடுகிறேன் என சுமிதா கூறியும் முதலில் ஏற்றுக்கொள்ளாத அந்த மருத்துவர் வெகு நேரம் கெஞ்சிய பிறகு ஊசி போட்டிருக்கிறார். ஆனால் காலம் தாழ்த்தி ஊசி போட்டதால் அந்த குழந்தை இறந்து போனது. இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விசாரிக்கும் என உத்திரவாதம் கொடுத்ததால் அக்குழந்தையின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வில்லை. ஊசி போடுவதற்கு நேரம் அதிகம் எடுக்கப்படவில்லை எனவும் செவிலிய பெண்ணும், தப்புறவுத்தொழிலாளியும் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டதால் அவர்கள் இருவரையும் வேலையைவிட்டு நீக்கியிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic