Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 19, 2016

10 ஆண்டுகள் கழிந்த சிறைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் - ராமதாஸ்


10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரை விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி 2008-ஆம் ஆண்டில் 1,405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு தடையாக இருந்த இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சிறைகள் சீர்திருத்தப் பள்ளிகளாக இருக்க வேண்டுமே தவிர தண்டனைக் கூடங்களாக இருக்கக் கூடாது என்பதற்காகவே, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுபவர்களை விடுதலை செய்வது தமிழகத்தில் வழக்கமாக இருந்து வந்தது.

இதன்படி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும், மற்ற வழக்குகளில் தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகும் சிறைகளில் வாடும் கைதிகளையும் அரசியலமைப்புச் சட்டத்தின் 161 பிரிவைப் பயன்படுத்தி ஆளுநர் உத்தரவு மூலம் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். அதில், ஏதேனும் சட்டச் சிக்கல் இருப்பதாக தமிழக அரசு கருதினால் அவர்களை நீண்ட சிறை விடுப்பில் அரசு அனுப்ப வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic