Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 19, 2016

முதலில் கஷ்மீரை விட்டு வெளியேறுங்கள் - இந்தியா பதிலடி


கஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசை பேச்சு வார்த்தைக்கு அழைத்த பாகிஸ்தான் அரசை நொக்கி "முதலில் கஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்"  என பதிலடி கொடுத்துள்ளது.

கஷ்மீரில் ஒருமாதத்திற்கும் மேலாக நடந்து வரும் வன்முறை சம்பவங்களினால் அங்கு பெரும் பதட்டம் நிலவி வருகிறது. கஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் ஏஜாஸ் அகமது செளத்ரி இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதில் கடிதம் எழுதியுள்ளார் ஜெயசங்கர். இதனை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது "கஷ்மீர் பிரச்சனையில் தலையிட பாகிஸ்தானிற்கு எந்த உரிமையும் கிடையாது. கஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதி. கஷ்மீரில் முறைகேடாக ஆக்கிரமித்துள்ள பகுதியிலிருந்து முதலில் பாகிஸ்தான் வெளியேறட்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முதலில் நிறுத்திக்கொள்ளட்டும், பிறகு பேச்சுவார்த்தை பற்றி யோசிக்கலாம்.

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வன்முறைகளை தூண்டு வருவது உலக நாடுகளுக்கு தெரியும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதும், கஷ்மீரை கைப்பற்றுவதுமே அவர்களுடைய நோக்கம்.  இதற்காக கடந்த காலங்களில் இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்ததை வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது. இன்னமும் அதற்கான சூழ்ச்சிகளை பாகிஸ்தான் செய்து கொண்டிருக்கிறது. இனி பேச்சுவார்த்தை நடத்துவதா? வேண்டாமா? என்பதை பாகிஸ்தான் தான் முடிவு செய்ய வேண்டும்" இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாக  விகாஸ் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic