Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 25, 2016

’கொடுமை’ - மகளுடன் மனைவியின் பிணத்தை 10 கிலோமீட்டர் தூக்கிக் கொண்டு நடந்த கணவர்


ஒடிசா மாநிலம், காளஹண்டி மாவட்டத்தில், மிகவும் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்தவர் டானா மஜ்ஹய்.

இவருக்கு மனைவியும், 12 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், அவரின் மனைவி அம்மாவட்டதில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாமல், மரணமடைந்துள்ளார்.

அவரின் உடலை, மருத்துவமனையில் இருந்து 60 கிலோமீட்டர்  தொலைவில் இருக்கும் அவரின் கிராமத்திற்கு எடுத்துச்செல்ல, மருத்துவமனையின் தரப்பில் உதவி செய்யவில்லை.

மனைவியின் உடலை மருத்துவமனையில் இருந்து, கிராமத்திற்கு எடுத்து செல்ல வாகனத்திற்கு பணம் இல்லாததால், அவர், தன் மகளுடன், மனைவியின் உடலை தூக்கிக் கொண்டு, நடந்தே தன் கிராமத்திற்கு புறப்பட்டுள்ளார்.

10 கிலோமீட்டர் நடந்த பிறகு, உள்ளூர் தொலைக்காட்சி குழுவினர் அவரை பற்றி விசாரிக்க, தன் நிலையை அவர்களிடம் கூறியுள்ளார்.

உள்ளூர் தொலைக்காட்சி குழுவினர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூற, மாவட்ட ஆட்சியர் பதறிப் போய் அவசர ஊர்தியை அனுப்பியுள்ளார். மேலும், ஹரிச்சந்திர யோஜனா திட்டத்தின் கீழ், மனைவியின் இறுதி சடங்கிற்கு செலவிற்கு அவருக்கு பணம் கொடுக்கப்பட்டது.

’மஹபராயண’ திட்டத்தின் கீழ், ஏழை மக்களுக்கு, இறந்த உடலை எடுத்துச் செல்ல மருத்துவமனையில், இலவச வாகனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic