Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 14, 2016

ஆகஸ்ட் 15 எங்களுக்கு கருப்பு தினம் - சீக்கிய குழுக்களின்பகீர் நிலைபாடு


பல்வேறு சீக்கிய அமைப்புகள் லூதியானாவில் நேற்றைய தினம் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் நாளை சுதந்திரதினத்தை கொண்டாடப்போவதில்லை எனவும், ஆகஸ்ட் 15 தங்களுக்கு கறுப்பு தினம் என அறிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பல்வேறு சீக்கிய அமைப்புகள் அரசுக்கு எதிராக போர்கொடி தூக்கி வருகின்றனர். அவர்களில் தள் கலஷா, அகண்ட் கீர்தானி ஜதா, சீக்கிய மாணவர்கள் பேரவை மற்றும் பஞ்சாப் சீக்கிய இளைஞர்கள் அமைப்பு ஆகியவை குழுக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 70 வருடத்திற்கு மேலாக தங்களுடைய உரிமைகள் மற்றும் சுதந்திரம் பரிக்கட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 தங்களுக்கும் தங்களைப்போன்ற சிறுபான்மை மக்களுக்கும் ஓர் கறுப்பு நாள் என தெரிவித்துள்ளதோடு, சுதந்திர தின கொண்டாட்டங்களை புறக்கணிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளனர். இது தொடர்பாக தள் கலஷா அமைப்பின் தலைவர்  ஹர்பல் சிங் சீமா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது "ஆகஸ்ட் 15ல் இந்தியா முழுக்க சுதந்திர தின கொண்டாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் வேலையில் சீக்கிய சமூகம் மட்டும் தங்களுடைய இறையான்மையை நிலை நிறுத்த வேண்டியதற்கான சூழலில் இருக்கின்றனர். 70 வருடங்களுக்கு முன்பாக எங்களுடைய சீக்கிய சமூகம் சுதந்திரத்தை இழந்தது. அன்று முதல் இன்று வரை சுதந்திரத்தை அடைவதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம்" என தெரிவித்தார்.

கடந்த 70 ஆண்டுகளில், சென்ற சில வருடங்களில் மட்டும் எங்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு, அரசியல் சக்திகளால் அடிமைப்படுத்தப்பட்டு, சீக்கியர்களுக்கு எதிராக கஷ்மீர் மக்களுக்கு எதிராக, தலித் சமூகத்திற்கு எதிராக வன்முறைகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே நாங்கள் எங்களுடைய விடுதலைக்காக போராடி வருகிறோம் என ஹர்பல் சிங் மேலும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி அரசு சார்பில் நடத்தப்படும் இந்த சுதந்திரதினவிழாவை புறக்கணிக்குமாறு பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், கல்லூரி பயில்பவர்கள் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். சீக்கியர்கள் இந்த நிகழ்வில் பங்கு கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் நாளைய தினம் கருப்பு கொடி ஏந்த இருக்கின்றோம். எங்களுக்கு தேவை இந்தியாவிடமிருந்து விடுதலை மட்டுமே என அவர்கள் கூறியுள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic