இரோம் சர்மிளாவிற்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து தன்னுடைய 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவிருக்கிறார்.
மணிப்பூரின் இரும்புப் பெண் என அழைக்கப்படும் இரோம் சர்மிளா கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்திவருவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் வாழ வலுக்கட்டாயமாக குழாய் மூலம் மூக்கு வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அறையே சிறைச்சாலை போல் ஆகிவிட்டது.
இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு, தான் உண்ணாவிரதத்தை கைவிட்டு அரசியலில் குதித்து ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கக்கோரி போராடப்போவதாகவும், மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் சர்மிளா அறிவித்திருந்தார். அதன்படி இன்று மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக இரோம் சர்மிளா தெரிவித்தார். இதையடுத்து 10 ஆயிரம் சொந்தப்பிணையில் இரோம் சர்மிளாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஜாமீனில் விடுதலையான இரோம் சர்மிளா, அரசியலில் இணைந்து மணிப்பூர் முதல் அமைச்சராக விரும்புவதாகவும், அதன்பிறகு ஆயுதப்படைக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இரோம் சர்மிளா அரசியலில் வெற்றி பெற வாழ்த்துவதாக நீதிபதியும் தெரிவித்தார்.

No comments:
Write comments