தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என சட்டசபையில் கல்வி அமைச்சர் பெஞ்சமிம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பின் உயர் கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் மத்திய அரசு புதிய கல்வி கொள்கை குறித்து ஆவனை செய்யப்படும் குழுவில் அதிகாரிகள் மட்டுமே உள்ளனர், கல்வியாளர்கள் யாரும் இல்லை, இது தொடர்பாக மாநில அரசின் நிலைபாடு என்ன? திமுகவின் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய கல்வி அமைச்சர் பெஞ்சமின் தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு எந்த ரீதியிலும் ஆதரவு அளிக்கமாட்டோம். புதிய கல்வி கொள்கை தொடர்பாக மாநில அரசின் ஆலோசனையை மத்திய அரசு கேட்டுள்ளது. இது தொடர்பாக தீர விவாதம் நடத்தி மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதபிலிக்கும் வகையில் பாடதிட்டங்களை அமைப்பதற்கான அலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்தார். அதே போல் மாநிலத்தில் சிறுபான்மை சமூக மக்களுக்கான பாதுகாப்புகளும், உரிமைகளும் உறுதி செய்யப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும் இது தொடர்பான தனி தீர்மானம் ஏற்றப்படவேண்டும் என கோரிக்கை வைத்தார்.

No comments:
Write comments