இரமநாதபுரம் மாவட்டத்தில் இறந்துபோன இளைஞரின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படவேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே மாயாகுளத்தை சேர்ந்தவர் சேக் அலாவுதீன். இவரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச்சென்றிருக்கின்றனர். அப்போது தப்பி ஓடிய அந்த இளைஞர் திருப்புல்லானி அருகே உள்ள தோனி பாலத்திலிருந்து விழுந்து அடிபட்டதாகவும், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது இறந்துவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பல்வேரு குற்றவழக்குகளில் தொடர்புடையவர் என கூறப்படும் இவரை கடந்த 2ஆம் தேதி விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச்சென்றுள்ளனர். அவரை அழைத்து சென்ற அன்றிலிருந்தே அவருடைய செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்கள் ஏர்வாடி, திருப்புல்லானி உட்பட பல காவல் நிலையங்களில் அவரை அடைத்துவைத்து கடுமையாக தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது அவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார் எனவும், இதனாலேயே அவர் இறந்து போனார் எனவும் காவல்துறையினர் சேக் அலாவுதீனின் குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகவும் செய்திகள் வருகின்றன.
இது காவல்துறையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கஸ்டடி மரணம் எனவும், இதன் உண்மை தன்மையை கொண்டு வர வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் கொண்டு குழுவை கொண்டு பிரேதப்பரிசோதனை நடத்தி, சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Write comments