Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 5, 2016

தங்கம் விலை : சவரனுக்கு ரூ.240 குறைந்தது


சென்னை: தங்கம் விலையில் நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்தது.  தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால் உலக சந்தையில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3,019க்கும், ஒரு சவரன் ரூ.24,152க்கும் விற்பனையானது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.2,989க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.23,912க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை திடீர் வீழ்ச்சியை சந்தித்திருப்பது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு காரணமாக தங்கம் விலை குறைந்துள்ளதாக நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic