Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 5, 2016

தத்தளித்த தமிழக மீனவர்கள் : உதவிய இலங்கை கடற்படை...!!!


கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை உதவியது, மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்வது இன்று வரை தொடர்ந்து கொண்டு உள்ளது. படகு பழுதாகி நிற்கும் மீனவர்களும் கைது செய்யப்படுவதும் உண்டு. இதனை கண்டித்து தமிழக மீனவர்கள் பல முறை போராட்டம் நடத்தியும், இரு நாடு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், இதில் எந்த முடிவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டியை சேர்ந்த ரங்கநாதன் என்பவரது விசைப்படகில் நேற்று, பாலசந்திரன், முருகேசன், சூசை ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இன்று கரை திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 25 நாட்டிகல் மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, படகில் பழுது ஏற்பட்டது. அவர்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினரை அழைத்து உதவி கேட்டனர்.

வழக்கமாக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர், இந்த முறை அவர்களின் படகை, தங்களது படகுடன் கயிற்றில் கட்டி காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரியாணி மற்றும் அவர்களுக்கு தேவையான உணவு வழங்கினர். அங்கு தமிழக மீனவர்களின் படகை சரி செய்து பின்னர், தமிழக எல்லையில் கொண்டு வந்து விட்டனர்.


எப்போதும், தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர், தற்போது உதவி செய்துள்ளது புதுக்கோட்டை மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic