மராட்டிய மாநிலம் மரத்வாடா மண்டலத்தில் ஒரே வாரத்தில் 28 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டு உள்ளனர்.
மரத்வாடா மண்டலத்தில் வறட்சி காரணமாக கடந்த 7 நாளில் மட்டும் 28 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் மரத்வாடாவில் இந்த ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 732 ஆக உயர்ந்துள்ளது.
இதில், அதிகபட்சமாக பீட் மாவட்டத்தில் 156 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்திருக்கின்றனர். மரத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 440 பேர் மட்டுமே நிவாரண உதவி பெற தகுதியுடையவர்கள் என்று மண்டல கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிராந்தியத்தில் மேலும் இதுபோன்று விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவம் நிகழலாம் என்று அஞ்சப்படுகிறது, நீண்டகால வறட்சியினால் மனம் உடைந்து காணப்படும் விவசாயிகள் அறுவடை குறித்தும் கவலைக் கொண்டு உள்ளனர்.
வறட்சி காரணமாக 2015-ம் ஆண்டில் 1,133 விவசாயிகளும், 2014-ல் 551 விவசாயிகளும் பிராந்தியத்தில் தற்கொலை செய்துக்கொண்டனர்.

No comments:
Write comments