அன்னை தெரசாவுக்கு கத்தோலிக்க மதத் தலைமையிடமான வாடிகன் புனிதர் பட்டம் வழங்கபடுவதையொட்டி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அன்பு, கருணை, மனித நேயம் என்ற வார்த்தைகளுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்த அன்னை தெரசாவுக்கு வாடிகனில் 4–ந் தேதி நடக்கிற கோலாகல விழாவில் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு சோனியா காந்தி எழுதியுள்ள கடித்ததில் கூறியிருப்பதாவது,
அன்னை தெரசாவிற்கு வாடிகன் புனிதர் பட்டம் வழங்குவதை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். புனிதர் பட்டம் வழங்குவதன் மூலம் அன்னை தெரசா ஆற்றிய பணிகளை நீங்கள் அங்கீகரித்திருப்பதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்பு, கருணை, மனித நேயம் என்ற வார்த்தைகளுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்த அன்னை தெரசாவுக்கு செலுத்தப்படும் மரியாதை ஆகும். 1980-ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதும் அன்னை தெரசாவிற்குக் கிடைத்தது. வாடிகனில் வரும் செப்டம்பர் மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ள அன்னை தெரசாவை புனிதராக அறிவிக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர்களான மார்க்ரெட் ஆல்வா, லூசின்ஹோ பெலிரோ உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். எனது உடல்நிலை சீராக இருக்கும் பட்சத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன். இவ்வாறு அந்த கடிதத்தில் சோனியா காந்தி எழுதி உள்ளார்.

No comments:
Write comments