Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 10, 2016

வயதான தோற்றத்தை கொண்டுள்ள 4 வயது சிறுவன்

வங்கதேசத்தில் 4வயது சிறுவன் 80வயது முதியவர் போல தோற்றம் உள்ளதால் அவரால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவனைக் கண்டு மற்ற குழந்தைகள் அச்சமடைந்துள்ளனர்.

 
தெற்கு வங்கதேசத்தின் மகுரா பகுதியைச் சேர்ந்தவர் லாப்லு ஷிக்தர், இவரது மனைவி திப்தி கேதன். இந்த தம்பதிக்கு கடந்த 2012-ம் ஆண்டில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போதே கைகள், முகத்தில் தோல் சுருங்கி முதுமை தோற்றத்துடன் பிறந்துள்ளது.
குழந்தைக்கு பயேஜித் ஷிக்தர் என்று பெற்றோர் பெயரிட்டனர். தற்போது 4 வயதாகும் அந்த சிறுவன் 80 வயது முதியவர் போல் தோற்றமளிக்கிறார். சிறுவனுக்கு இதய நோய், பார்வை குறைபாடு, காது கேளாமை போன்ற குறைபாடுகளும் உள்ளதாம்.

பயேஜித் ஷிக்தர் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது முதுமை நோய்க்கான காரணத்தை கண்டறிந்து இலவசமாக சிகிச்சை அளிக்க டாக்காவில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிறுவனின் தந்தை லாப்லு ஷிக்தர் கூறியதாவது, எனது குழந்தையின் இந்த குறைபாடுகள் குறித்து பல மருத்துவரிடம் காண்பித்துள்ளேன். ஆனால், மருத்துவர்கள் எனது குழந்தையின் நிலை குறித்து குழப்பம் அடைந்துள்ளனர் என்று கூறினார். தற்போது 4 வயதாகும் அந்த சிறுவன் 80 வயது முதியவர் போல் தோற்றமளிக்கிறார்.

டாக்கா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்ததாவது, குழந்தையின் இந்த நிலைக்கு காரணம் என்பது குறித்து கண்டரிய விரிவான சோதனை நடத்த வேண்டும். நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டால் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic