ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தங்கள் உறுப்பினர்கள் அணியும் ஆடையில் மாற்றம் கொண்டுவந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
அமைப்பு துவங்கப்பட்ட காலம் முதல் இன்று வரை வெள்ளை நிற சட்டையும், காக்கி நிற அரைக்கால் டிரவுசரையும் அணிந்து வந்தனர். 90 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக சீறுடையில் மாற்றம் கொண்டு வந்திருப்பதாக அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் மன்மோகன் வைத்யா தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு துவங்கப்பட்ட தினமான தசரா தினம் வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அமைப்பு துவங்கப்பட்ட நாளிலிருந்து இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என மன்மோகன் வைத்யா தெரிவித்துள்ளார். அன்று முதல் காக்கி அரை டிரவுசருக்கு பதிலாக பழுப்பு நிற முழு டிரவுசர் நடைமுறைப்படுத்தப்படும். இதற்காக சுமார் 7 லட்சம் முழு டிரவுசர்கள் தயாரிக்கபடவுள்ளதாகவும், இதற்கான விலை ரூபாய் 250/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் துவக்கமாக கிட்டத்தட்ட 2 லட்சம் முழு டிரவுசர்கள் ஏற்கனவே பல மாநிலங்களில் இயங்கி வரும் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக மன்மோகன் வைத்யா தெரிவித்தார். சீறுடைக்கான மாற்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முதல் தலைமைக்குழுவான அகில பாரதீய பிரதிநிதி சபை உறுப்பினர்கள் முடிவெடுத்ததாக கூறினார்.
இது தவிர மற்ற ஆடைகளான வெள்ளை நிற சட்டை, கருப்பு தொப்பி, பழுப்பு நிர கால் உறை, மூங்கில் கம்பு ஆகியவைகளில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments