கஷ்மீர் பிரச்சினைகளுக்கு அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நிரந்தர தீர்வை காணவேண்டும் என்று கஷ்மீர் எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 9–ந் தேதி கஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு அவருடைய ஆதரவாளர்களும், காஷ்மீர் பிரிவினைவாதிகளும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வன்முறைக்கு இதுவரை 67 பேர் பலியாகிவிட்டனர். பொதுமக்களில் 5 ஆயிரத்திற்குமேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
40 நாட்களுக்கு மேலாகியும் கஷ்மீரில் இன்னமும் நிலைமை சீராகவில்லை. அங்கு தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு மற்றும் முழு கடை அடைப்பு போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வன்முறை வேகமாக பரவி வருவது தொடர்பாக தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, கஷ்மீரின் மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன் சென்று அண்மையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தார். அப்போது ஜனாதிபதி தலையிட்டு கஷ்மீர் நெருக்கடிக்கு தீர்வுகாண வலியுறுத்தினர்.
இதேபோல் நேற்று தேசிய மாநாட்டு கட்சி, கஷ்மீர் மாநில காங்கிரஸ் கட்சி, கஷ்மீர் மார்க்சிஸ்டு உள்பட 8 கட்சிகளின் தலைவர்கள் உமர் அப்துல்லா தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது.
அப்போது, கஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர்கள் மாநிலத்தின் கள நிலவரத்தை பதிவு செய்தனர். கஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கவேண்டும் எனவும் பிரதமரிடம் அவர்கள் வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தனர்.
அதில், ‘கஷ்மீரில் நிலவும் அமைதியற்ற சூழலால் இதுவரை 60–க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். அதிக படைப்பிரயோகம் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்களும், இளம்பெண்களும் படுகாயம் அடைந்து உள்ளனர். பெல்லட் குண்டு துப்பாக்கிகளை பயன்படுத்துவதால் இவர்களில் ஏராளமானோர் கண்பார்வை இழந்தும், உடல் ஊனம் அடைந்தும் விட்டனர். எனவே நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்பாக மாநிலத்தின் நெருக்கடிக்கு அர்த்தமுள்ள மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
மோடி, கஷ்மீர் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பேசியது குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கஷ்மீர் வன்முறையில் பலர் பலியாகி இருப்பது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. வன்முறையில் பலியானவர்கள், அது யாராக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் நமது மக்கள்தான். மத்திய அரசும், இந்த நாடும் கஷ்மீர் மாநில அரசின் பின்னால் உள்ளது. எனவே, இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தை மக்களிடையே ஏற்படுத்தவேண்டும். மாநிலத்தில் இயல்பு நிலைமை திரும்புவதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.
கஷ்மீரில் உள்ள பிரச்சினைகளுக்கு நமது அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நிரந்தர மற்றும் உறுதியான தீர்வை நாம் காணவேண்டியது அவசியமாகும். மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த அறிக்கை வெளியான சிறிது நேரத்தில் உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பதிவில், ‘‘கஷ்மீர் மாநில பிரச்சினைகளுக்கு அனைவரும் ஒன்றாக இணைந்து தீர்வுகாண வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்து இருப்பதை வரவேற்கிறோம்’’ என்று கூறி உள்ளார்.

No comments:
Write comments