Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 22, 2016

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் காலமானார்


சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் காலமானார். அவருக்கு வயது 92.

கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். எனினும் சிகிச்சை பலன் இன்றி இன்று அவர் காலமானார். சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் மறைவுக்கு அந்நாட்டு பிரதமர் மற்றும் அமைச்சரவை சகாக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை சிங்கப்பூரின் அதிபராக இவர் இருந்தார். மிக நீண்டகாலமக அதிபர் பதவியியில் இருந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறையாக அதிபராக பதவி வகிக்க வாய்ப்புகள் வந்தபோதும் அதனை ஏற்க நாதன் மறுத்துவிட்டார். அவருக்கு பிறகு, டோனி டான் கெங் யாம் அதிபராக பதவியேற்றார்.

தமிழரும், இந்திய வம்சாவளியுமான நாதன், அதிபராவதற்கு முன் மலேசியா,அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதராக இருந்துள்ளார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் "பிரவாசி பாரதிய சம்மான்' விருது கடந்த 2012-ஆம் ஆண்டு எஸ்.ஆர். நாதனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic