காஷ்மீரில் எல்லையில் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது, பயங்கரவாதிகள் மூவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குபுவாரா மாவட்டத்திற்கு உள்பட்ட தாங்தார் செக்டாரில் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ முயற்சி செய்தனர். அப்போது பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். சண்டை நடைபெற்ற பகுதியில் இருந்து புகை மூட்டம் வெளியேறுவதை காண முடிந்தது. இருதரப்பு இடையே நடைபெற்ற கடும் துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்று ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் கடந்த 19-ம் தேதி தாங்தார் செக்டாரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் தொடர்பு உடையவர்கள். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது என்று ராணுவம் தெரிவித்து உள்ளது. கடைசியாக அப்பகுதியில் இருந்து கிடைத்த தகவலின்படி, பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர் என்றே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜூன் மாதமும் தாங்தார் செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். கடந்த மூன்று நாட்களில் எல்லையில் நடைபெறும் இரண்டாவது ஊடுருவல் முயற்சி இதுவாகும். பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.

No comments:
Write comments