Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 20, 2016

மதரசாக்களை முற்றுகையிட முயன்ற ஆர்.எஸ்.எஸ் - கேரளாவில் பதட்டம்!


மலப்புரம்: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி ஹிந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பினர் மதரசாக்களை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் இஸ்லாமிய மதரஸாக்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி நூற்றுக்கணக்கான இந்து அமைப்பினர் மதரசாவை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரள மாநில பா.ஜ.க தலைவர் கும்மன்னம் ராஜசேகரன் தலைமையில் பேரணியாக வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவினரின் இந்த முற்றுகை போராட்டத்தை எதிர்த்து பாப்புலர் பிரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் பெரும் திரளாக கூடினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. இது தொடர்பாக கேரள பா.ஜ.க தலைவர் கும்மன்னன் ராஜசேகரன் கூறியதாவது "கேரளாவில் சமீபகாலமாக பல இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ள மாநில உளவுத்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.  இவ்விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வு அதிகாரிகள் தலையிடவேண்டும் என கோரியுள்ளார். இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டிருந்து ஒருவருக்கொருவருக்கு எதிராக கோஷங்கள் எழுபப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பிற்காக போலீஸார் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic