குஜராத்தில் இறந்த பசுவின் சடலத்தை அகற்ற தந்தை மறுத்த காரணத்தினால் 15 வயது தலித் சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
குஜராத் மாநிலம் கிர்–சோம்நாத் மாவட்டத்துக்கு உட்பட்ட உனா என்ற இடத்தில் இறந்த பசு ஒன்றின் தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலை கண்டித்து குஜராத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து இறந்த பசுக்களின் சடலங்களை இனி அகற்றப்போவது கிடையாது, சுத்தம் செய்யப்போவது கிடையாது என்று தலித் பிரிவினர் அறிவித்துவிட்டனர். இந்நிலையில் ஆமதாபாத்தில் பாவ்தா கிராமத்தில் இறந்த பசுவின் சடலத்தை அகற்றுவதற்கு தலித் பிரிவை சேர்ந்த தினேஷ் பர்மார் மறுத்துவிட்டார்.
இதற்கிடையே அவரது 10 வகுப்பு படிக்கும் மகன் கடைக்கு சென்று சாக்லேட் வாங்கிய போது, இதுதொடர்பாக சாகில் தாகூர், சாவர்கான் பதான் கேள்வி எழுப்பிஉள்ளனர். சிறுவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர், பின்னர் கற்களால் சிறுவனை தாக்கி உள்ளனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவன் பேசுகையில், ”இறந்த விலங்குகளில் உடல்களை அகற்றுவதை நிறுத்தியது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்கள். எங்களுடைய சமுதாயம் அழைப்பு விடுத்ததில் இருந்து நாங்கள் அதனை நிறுத்திவிட்டோம் என்று கூறினேன். இதனால் கோபம் அடைந்த அவர்கள் என்னை தாக்கினார்கள் பின்னர் கற்களை கொண்டு தாக்கினார்கள்,” என்று கூறினார். இதுதொடர்பாக தினேஷ் பர்மார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார். இதுதொடர்பாக போலீசார் எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பிற இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சாகில் தாகூர், சாவர்கான் பதானை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:
Write comments