தடகள் வீரர்கள் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று பல பதக்கங்களையும் வெல்ல வேண்டுமென்றால் அவர்கள் சாப்பிட வேண்டியது மாட்டிறைச்சி அல்ல, பசும்பாலில் தயாராகும் நெய்யை சாப்பிட வேண்டுமென பாபா ராம் தேவ் கூறியுள்ளார்.
சமீபத்தில் பா.ஜ.க எம்.பி உதித் ராஜ் "ஜமாய்காவின் உசேன் போல்டுக்கு அவரது பயிற்சியாளர் மாட்டிறைச்சி உண்ணுமாறு அறிவுறுத்தியதன் விளைவாகவே அவர் மாட்டிறைச்சி சாப்பிட்டு நிறைய பதக்கங்களை வெல்ல முடிந்தது. மாட்டிறைச்சியில் நல்ல புரதச்சத்துக்கள் இருக்கின்றது. நமது விளையாட்டு வீரர்களுக்கு கண்டிப்பாக இது தேவைப்படுகிறது. நமது தடகள வீரர்களுக்காவது மட்டும் மாட்டிறைச்சி உண்பதை அனுமதிக்க வேண்டும். நமக்கு தங்க பதக்கம் வேண்டுமெனில் இதை அனுமதிப்பதை தவிற வேறு வழி இல்லை" என தெரிவித்தார்.
இது பெரும் சர்ச்சையாகிப்போனது. பா.ஜ.கவைச்சேர்ந்த ஒரு எம்.பியே இத்தகைய கருத்தை வெளியிடுவது பலருக்கும் வியப்பாக இருந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் பிரபல யோகா சாமியார் பாபா ராம் தேவ் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது "தடகள வீரர்களுக்கு நல்ல ஆரோக்கியம் வேண்டுமெனில் அவர்கள் பசும்பாலில் தயாரிக்கப்படும் நெய்யை அதிகமாக உட்கொள்ள வேண்டுமே தவிர மாட்டிறைச்சியை அல்ல" என தெரிவித்திருக்கிறார்.
இதனால் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

No comments:
Write comments