காஷ்மீரில் வன்முறையைக் கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகளை பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொது நலவழக்கில் பதிலளித்த சி.ஆர்.பி.எஃப்
காஷ்மீர் போராட்டத்தை அடக்க 3000 கார்ட்ரிட்ஜ்கள் பயன்படுத்தப்பட்டன. 1.3 மில்லியன் அளவுக்கு பெல்லட் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இது போக 14 வகையான ஆயுதங்கள் காஷ்மீரில் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ள சி.ஆர்.பி.எஃப், ஜூலை 8ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை 8,650 கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தி உள்ளதாகவும், 2,671 பிளாஸ்டிக் பெல்லட்டுகளைப் பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இப்படி தாங்கள் பயன்படுத்திய ஆயுதங்களின் எண்ணிக்கையை பட்டியலிட்டுள்ள சி.ஆர்.பி.எஃப் உயிரிழப்பை தடுக்கவே குறைந்த சேதத்தை உருவாக்கும் பெல்லட் குண்டுகளை பயன்படுத்துவதாகக் கூறியுள்ளது. இது இந்தியாவில் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது. பயன்படுத்தப்பட்ட பெல்லட் குண்டுகளால் நூற்றுக்கணக்கானவர்களின் கண்பார்வை பறிபோனது, மிகப்பெரிய மனித உரிமை பிரச்னையாகப் பார்க்கப்பட்டது.
அதிக சேதத்தை உருவாக்கும் பெல்லட் குண்டுகளுக்கு பதிலாக எதை பயன்படுத்தலாம் என்பதை ஆராய மத்திய உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என். பிரசாத் தலைமையிலான ஏழு பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. நேற்று அந்தக் குழு தன் அறிக்கையை அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையை மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மெஹரிஷியிடம் சமர்ப்பித்தது.
அதிகமான சேதத்தை உருவாக்கும் பெல்லட்டுகளுக்கு பதில் மிளகாய் குண்டு மற்றும் ஸ்டன் லேக் குண்டுகளை பயன்படுத்தலாம் என்று கூறியிருக்கிறது நிபுணர்குழு. மிளகாயிலிருந்து எடுக்கப்படும் பெலார் கானிக் அமிலம் மற்றும் வானிலைல் அமைடு போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மிளகாய் குண்டுகள் மற்றும் ஸ்டன் லேக் குண்டுகளைப் பயன்படுத்தலாம் என பரிந்துரைத்துள்ளது. மிளகாய் குண்டுகள் தாங்கமுடியாத எரிச்சலை ஏற்படுத்தி கலவரக்காரர்களை தற்காலிகமாக முடக்கும் என்பதால் அதை பயன்படுத்துவதில் முக்கியத்துவம் கொடுக்கலாம் என்கிறது அந்த அறிக்கை. அதிக ஒலி எழுப்பும் ‘லார்டு’ வகை குண்டுகளை பழமையான கட்டடங்கள் உள்ள பகுதிகளில் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளது அந்தக் குழு. ஆனாலும் பெல்லட் குண்டுகளை தடை செய்ய வேண்டியதில்லை என்கிறது. அரிதினும் அரிதாக அந்த குண்டுகளைப் பயன்படுத்தலாம் என்கிறது அறிக்கை.

No comments:
Write comments