Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 31, 2016

தமிழகம் விவசாயிகள் நடத்திய மாநிலம் தழுவிய போராட்டம்!


கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரை பெற்றுத்தர வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று பரவலாக பல்வேறு பகுதிகளிலும் முழு அடைப்பு மற்றும் இரயில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், தமாகா, முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

முன்னதாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர், பல்லாவரம், தாம்பரம் இரயில் நிலையங்களில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 100 இடங்களில் இரயில் மறியல், 1000 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. சென்னை தாம்பரத்தில் விவசாயிகள் சங்கத்தினரும் அவர்களுக்கு ஆதரவளித்து மனித நேய மக்கள் கட்சியினரும் இரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கடலூர் மாவட்டத்திலும் இரயில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் இரயில் மறியல் நடைபெற்றது. திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம் ஆகிய 3 இடங்களில் இரயில் மறியல் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் நாகை, சீர்காழி, கொள்ளிடம், வேதாரண்யம், தலைஞாயிறு, திருப்பூண்டி, வைத்தீஸ்வரன் கோவில், உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 200 லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்த்தில் பெரிய அளவில் போராட்டங்கள் இல்லை. காலை நேரத்தில் மட்டும் தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது நிலைமை சீரடைந்துள்ளது.

விருத்தாசலத்தில் இரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரயில் நிலையம் அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic