நேற்றைய தினம் ஏம்னெஸ்டி இண்டர்னேஷனல் இந்தியா நிறுவனத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவர் அமைப்பினர் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியில் 20 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யாத் பரிஷத் (எபிவிபி) அமைப்பு சார்பில் ஆமென்ஸ்டி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்னஸ்டி நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இந்தியாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எபிவிபி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் எல்லை மீறி சென்றதால், கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
இதில் 20ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயமடைந்ததை தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள சி.எம்.ஹெச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனனையி அனுமதிக்கப்பட மாணவர்களில் ஒருவருக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் காலை 11 மணி அளவில் சுமார் 150 ஏபிவிபி அமைப்பினர் பெங்களூரில் ஆம்னெஸ்டி நிறுவனத்தின் அலுவலகம் முன்பு திரண்டு அவர்களின் கொடியை எரித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கொண்டு வன்முறை சம்பவத்தை நிகழ்த்த திட்டமிட்டிருந்தனர். காவல்துறையினர் தரப்பில் தெரிவித்திருப்பதாவது, " நாங்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர்கள் கேட்கவில்லை. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இது இருக்கிறபடியால் எந்தவித எரிப்பு போராட்டத்தையும் இங்கே நடத்தக்கூடாது என கூறியும் அவர்கள் கேட்காததால், தடியடி நடத்தி அவர்களை கலைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Write comments