Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 11, 2016

பிரதமர் மோடி அடுத்த மாதம் வியட்னாம் பயணம்



இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் வியட்நாம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மிக வேகமான பொருளாதார மேம்பாட்டை அடைய வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனால் நாட்டிற்கு பெருமளவில் அந்நிய முதலீடு கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஆர்.டி.ஐ. மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு சுற்றுப்பயணத்தினால் எவ்வளவு அந்நிய முதலீடு கிடைத்துள்ளது என கேட்ட எவருக்கும் இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் தான் அந்நிய முதலீடு கிடைக்கும் என்பதே ஏமாற்றுவித்தை என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அடுத்தமாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி வியட்னாம் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இரு நாட்டிற்குமிடையே புதிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான துவக்கமாக இந்த பயணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு சீனா பகுதியில் சீனாவிற்கும் வியட்னாமிற்குமிடையே எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இதில் வியட்னாமிற்கு சாதகமான நிலைப்பாட்டையே இந்தியா எடுத்துள்ளது. அதே சமயம் தெற்கு சீனா பகுதியில் அந்நாடு தனது இராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இதற்கு எதிர்பு தெரிவித்து வியட்னாம் அரசு உலக நாடுகளின் ஆதரவை திரட்டி வருகிறது.

சீனாவோ கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. அருணாச்சல பிரதேச மாநில எல்லைகளின் மூலமாக சீனா அடிக்கடி ஊடுறுவி வருகிறது. எனவே சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமரின் இந்த வியட்னாம் பயணம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic