Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 11, 2016

மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - பாதுகாப்பு வீரர் பலி


பீஹார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்குமிடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

வட மாநிலங்களில் சமீபகாலமாக மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. பீஹார் மாநிலத்தில் லக்கிசராய் மாவட்டத்தின் கோகர்ஹாதி வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படையைச்சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எதிர்பார்த்திராத வகையில் திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர்.

துவக்கத்தில் நிலை குழைந்துபோன பாதுகாப்பு வீரர்கள் பின்னர் சுதாரித்துக்கொண்டு எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்குமிடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் தரப்பில் என்ன ஆனது என்ற உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic