தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டி சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.
இதில், பாடகர் கார்த்திக்கின் தமிழ்த்தாய் வாழ்த்து
பாடலுடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. அதைத் தொடர்ந்து, நடிகைகள் தன்ஷிகா,
ஸ்ரேயா ஆகியோரது நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் நடிகர் தனுஷ்
டிஎன்பிஎல் கோப்பையை அறிமுகம் செய்தார்.
இதையடுத்து நடைபெற்ற முதல் ஆட்டத்தில், சேப்பாக்
சூப்பர் கில்லிஸ், டூட்டி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற
பேட்ரியாட்ஸ் அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது.
பேட்ரியாட்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன்
சுந்தர், கெüஷிங் காந்தி ஆகியோர் களமிறங்கினர். இதில் கெüஷிக் 11
பந்துகளுக்கு 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்க,
மறுமுனையில் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுந்தர் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மாருதி ராகவ் 13 ரன்களில் பெவிலியன் திரும்ப, உமாசங்கர்
சுஷில் களத்துக்கு வந்தார்.
தினேஷ் கார்த்திக் நிதானமாக ஆடி 43 பந்துகளில் அரைசதம்
கடந்தார். உமாசங்கர் 19 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில்
மகேஷின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஆகாஷ் சர்மா 5 ரன்களில்
ரன் அவுட் ஆனார்.
20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள்
எடுத்தது டூட்டி பேட்ரியாட்ஸ். அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 67
ரன்களுடனும், சத்யநாராயணன் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.
சேப்பாக் சூப்பர் கில்லிஸ் தரப்பில், அந்த அணியின்
சதீஷ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மகேஷ், ஆண்டனி தாஸ் தலா 1
விக்கெட் வீழ்த்தினர்.

No comments:
Write comments